01/05/2025. Pothikai.fm
இன்றைய_ராசிபலன்கள். வியாழக்கிழமை)
💐மேஷம்
ராசி நண்பர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். புதிய யுக்திகளை கையாளூவீர்கள் .காரியம் அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.தொழில் வியாபாரம் லாபத்தை தரும்.
💐ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, பால்ய நண்பர்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். கணவன் மனைவிடையே அந்யோண்யம் ஏற்படும். ஆன்மீக பயணங்கள் மேற்க்கொள்ள முடியும்.தொழில், வியாபாரம் சிறக்கும்.
💐மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.சந்தோஷமாக காணப்படுவீர்கள் புதிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். வாகன வசதிகள் பெருகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
💐கடகம்
கடக ராசி நண்பர்களே,சோம்பல் அதிகமாக காணப்படும் காரிய தடைகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து போகவும்.கணவன் மனைவிக்குள் ஈகோ தவிற்ப்பது நலம். உறவினர்கள் வருகை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
💐சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, மனதில் புதிய உற்சாகம் ஏற்படும்.பண வரவு நன்றாக இருக்கும் பயணங்களால் அலைச்சல் இருக்கும். திட்டமிட்ட வேலைகள் தாமதமின்றி முடியும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.
💐கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப செலவுகள் அதிகரிக்கும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம்.முன் கோபத்தை தவிற்பது நலம். நண்பர்களுடன் சுமூக உறவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
💐துலாம்
துலாம் ராசி நண்பர்களே, சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும்.நினைத்த காரியம் நடக்கும். புதிய முயற்சியில் இருந்த தடை விலகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.மதியம் 01:30 வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப கஷ்டங்கள் குறையும்.பண வரவு நன்றாக இருக்கும் மனக்குறைகள் நாளடைவில் நீங்கும். புது நபர்களை அதிகம் நம்பி ஏமாற வேண்டாம்.பண விவகாரங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
மதியம் 01:30 மணிமுதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.
அடுத்த இரண்டு தினங்கள் கவனம் தேவை.
💐தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப பெருமை உயரும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும்.யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
💐மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப விவகாரங்களில் கவனம் தேவை. பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். எதிரிகள் சற்று விலகியே நிற்பர். உத்யோகத்தில் மனநிறைவு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
💐கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். புது நண்பர்கள் அறிமுகமாவர்.வரவுக்கேற்ப சிலவுகள் உண்டாகும். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.உடல்நல குறைபாடுகள் தோன்றி மறையும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
💐மீனம்
மீன ராசி நண்பர்களே, காரிய தடைகள் விலகும் உற்சாகமாக காணப்படுவீர்கள்.புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உதிக்கும்.சுற்றி இருப்பவர்களால் நன்மை உண்டு. மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
