ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளை அனுப்பி 26 பேரை படுகொலை செய்த பாகிஸ்தான் இப்போது இந்தியாவிடம் இருந்து வரப்போகும் அதிரடியான தாக்குதல்களை நினைத்து கதிகலங்கிப் போயுள்ளது. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸிடம், இந்தியாவை சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்குங்கள் என பாகிஸ்தான்
�
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தி உள்ளார்.ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீதான கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு நமது ராணுவம் பதிலடி தருகிறது.இந்த நிலையில் டெல்லியில் நேற்று பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படகளின் தளபதிகள், தேசிய
�
பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, முப்படைகளும் சுதந்திரமாக செயல்படலாம் என பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளை மீட்கும் வகையில் இந்தியா அடுத்த 36 மணிநேரத்துக்குள் தாக்குதல் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் பகிரங்கமாக அலறி உள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா
�
தரார். இதனிடையே ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸிடம் தொலைபேசியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவின் கோபம், தாக்குதல் அச்சம் குறித்து அழுது புலம்பி உள்ளார். மேலும் இந்தியாவை சற்று பொறுமை காக்க வேண்டும் என ஐநா சபைதான் அறிவுறுத்த வேண்டும் என கெஞ்சியிருக்கிறார் ஷெபாஸ் ஷெரீப். அத்துடன், பாகிஸ்தானும் அனைத்து
�
வகையிலான பயங்கரவாத தாக்குதல்களையும் நிராகரிப்பதாகவும் உறுதியளித்தாராம் ஷெபாஸ் ஷெரீப்.மேலும் இந்தியா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால், பாகிஸ்தான் தங்களை தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அன்டோனியா குட்டரெஸிடம், ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார் என்கின்றன பாகிஸ்தான் நாளேடுகள்.
