இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதி அசிம் முனீர் நேரடி தலையீட்டின் கீழ் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இந்திய ராணுவம்
�
கடுமையான பதிலடியை தர திட்டமிட்டு வருகிறதாம்.பஹல்காம் தாக்குதலுக்கு பின் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் .. இந்த தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் ராணுவத்தின் மறைமுக தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதி அசிம் முனீர் நேரடி தலையீட்டின் கீழ் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த
�
தாக்குதல் தீவிரவாத தாக்குதல் போல இல்லை. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.பாக். ராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்எஸ்ஜியை சேர்ந்தவர் இவர் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலும் அப்படித்தான் நடந்து உள்ளது. அதாவது தீவிரவாத தாக்குதல்கள் பெரும்பாலும் தற்கொலை தாக்குதல்கள். தீவிரவாதிகள் தங்கள் உயிரை பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால் ராணுவ பயிற்சி தாக்குதல்களில் தாக்குதல் நடத்துபவர்கள்.. உயிருடன் திரும்பி வர திட்டம் வகுத்திருப்பார்கள்.
