பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் மாயமாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.காஷ்மீரில் கடந்த வாரம் பஹல்காம்
�
பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த தாக்குதல் நாட்டையே உலுக்கிவிட்டது. அங்கு பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயற்கை அழகை ரசித்து வந்த சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.தளபதி சையத் அசிம் மாயம் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது.
�
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற தாக்குதலை நடத்தலாம் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் குறித்து சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பத்துடன் எஸ்கேப்? அதாவது கடந்த சில நாட்களாகவே முனீரை காணவில்லை என்றும் அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும், அவரது குடும்பத்தினரின்
�
எங்குள்ளனர் என்பது குறித்தும் எந்தவொரு தகவலும் இல்லையாம். இது தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்களை நம்மால் பார்க்க முடிகிறது. முனீர் மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகச் செல்லப்படுகிறது. அதேநேரம் இதுபோன்ற செய்திகளை உறுதி செய்ய முடியவில்லை.ஜெனரல் முனீர் இப்போது திடீரென மாயமாகியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது. பஹல்காம் தாக்குதலில் என்ன தான் தனக்குத்
�
தொடர்பில்லை என பாகிஸ்தான் சொன்னாலும், முதற்கட்ட தகவல்கள் பாகிஸ்தானின் தொடர்பைக் காட்டுவதாகவே இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் ராணுவத்தை வழிநடத்தும் ஜெனரல் அசிம் முனீர் மாயமாகியுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏன் முக்கியம்? ஏனென்றால் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, ஜனநாயகம் எனச் சொன்னாலும் அங்கு எப்போதும் ராணுவத்தின் கை ஓங்கியே இருக்கும். இதன் காரணமாகவே இம்ரான் கான் ராணுவத்தை பற்றிய பேசியவுடனேயே அவர் பதவியில்
�
இருந்தே காலி செய்யப்பட்டார். அங்கு ராணுவத் தளபதி என்பவர் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுப்பவராக இருக்கிறார். அப்படியிருக்கும்போது அவர் மாயமாகியுள்ளதே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இதே முனீர் தான் பஹல்காம் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.தி ரெசிஸ்டன்ஸ்
�
ஃப்ரண்ட் முனிர் மாயமானது ஒரு பக்கம் இருக்க தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகளிலும் கவனம் திரும்பியுள்ளது. பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே முதல் ஆளாக இவர்கள் தான் பொறுப்பேற்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ- தொய்பாவின் ஒரு பிரிவாகவே தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் கருதப்படுகிறது. ஆனால், சில நாட்களிலேயே திடீரென அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என டோனை மாற்றிவிட்டனர். பாகிஸ்தானுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதைக் காட்ட அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
