போப் இறுதிச்சடங்கு நிகழ்வில் தனியாக ஆலோசனை நடத்திய டிரம்ப் – ஸெலன்ஸ்கி
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகா தேவாலயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி ஆலோசனை செய்தனர்.
�
இந்த சந்திப்பு குறித்து தெரிவித்த வெள்ளை மாளிகை, “இது பயனுள்ள பேச்சுவார்த்தையாக அமைந்தது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, “அடையாள சந்திப்பான இது வரலாற்றில் முக்கியமான சந்திப்பாக மாறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு முன், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மக்ரோங் ஆகியோரும் சந்தித்துக் கொண்டனர்.
