ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிவிபத்து- 10 பேர் பலி- 400 பேர் படுகாயம! 100 அடி உயரத்தில் கரும்புகை
�
ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தின் ஒரு பகுதியில் திடீரென பயங்கர வெடிசப்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து விண்ணை முட்டும் வகையில் 100 அடி உயரத்தில் கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த வெடிவிபத்தில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வெடிவிபத்தால் சுமார் 10 கிமீ தொலைவு வரையிலான பகுதிகள் அதிர்ந்தன. இம் மர்ம வெடிவிபத்தின் பின்னணி குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.ஈரான்
�
நாட்டின் பந்தர் அப்பாஸ் துறைமுகம்தான் மிக முக்கியமானதாகும். உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பந்தர் அப்பாஸ் துறைமுகம் மிக முக்கிய இடம் வகிக்கிறது.பந்தர் அப்பாஸ் துறைமுகத்தின் ஒரு பகுதியில் வேதிப் பொருட்கள் கண்டெய்னர் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் கச்சா எண்ணெய் தொட்டிகளும் உள்ளன. இந்த நிலையத்தில் இன்று பயங்கரமான சப்தத்துடன் திடீரென பொருட்கள் வெடித்து சிதறின. இந்த மர்மமான வெடிவிபத்து எப்படி நிகழ்ந்தது எனவும் தெரியவில்லை. இந்த விபத்தைத் தொடர்ந்து வானை முட்டும் அளவுக்கு 100 அடி உயரத்துக்கும் மேல் கரும்புகை பரவியது. இது
�
தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையத்தில் உள்ள கண்டெய்னரில் இருந்த வேதிப்பொருட்கள் வெடித்ததாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனாலேயே பயங்கர வெடிசப்தம் கேட்டதாகவும் ஈரான் அரசு
�
�
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு மிக மோசமாக உள்ளது. இரு நாடுகளிடையேயான அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. ஈரான்-அமெரிக்கா உறவின் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் ஈரான் பொருளாதாரத்தின் அடிநாதமான, முதுகெலும்பாக இருக்கும் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த பயங்கரமான, மர்ம வெடிவிபத்தும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பாமல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
