ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கையால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான், பஹல்காம் விவகாரத்தில் நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று கூறியுள்ளது. இதனை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ்
�
ஷெரீப் கூறியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கையால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான், பஹல்காம் விவகாரத்தில் நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று கூறியுள்ளது. இதனை பாகிஸ்தான்
�
பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார் ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலமான பஹல்காமில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்துகொண்டு இருந்த நிலையில் அவர்கள் மீது திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் தமிழக சுற்றுலா பயணிகள் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.பஹல்காம் தாக்குதல்
�
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த பயங்கரவாத செயலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டிஆர்எப் என்ற இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது. இந்தியாவில் இந்த அமைப்புக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் டிஆர்எஃப் அமைப்புக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் அம்பலாகியுள்ளது. இதனால் தான் இந்தியா உடனடியாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை கொடுக்கப்படும் என பிரதமர் மோடி
�
சூளுரைத்தார். தொடர்ந்து பாகிஸ்தானுக்கான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. பாகிஸ்தானின் உயிர் நாடி என சொல்லும் அளவுக்கு சிந்து நதியை அந்த நாடு நம்பியிருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அலறியது. உடனே சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு என்பது போருக்கான அறிவிப்பாக நாங்கள் கருதுகிறோம் என்று கூறியது.பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஷிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களையும் உடனடியாக வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டது.எல்லையில் இரு நாடுகளும் படைகளை தயார் நிலையில் வைக்க
�
ஆயத்தமாகியது. பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பதற்றம் உண்டாது. தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் என்பது அதிகரித்தது. இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. 2வது நாளாக இன்றும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் நம் நாட்டு வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு பதிலடியாக நம் ராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த நிலையில், பஹல்காம்
�
விவகாரத்தில் நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார். கைபர் பக்துன்க்வாவில் உள்ள ராணுவ அகடமியில் பட்டம் முடித்தவர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது பொறுப்பு மிக்க நாடாக நம்பகமான விசாரணையில் பங்கெடுக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. சமீபத்தில் பஹல்காமில் நடைபெற்ற துயரம் பழி கூறும் போக்குக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க
�
வேண்டும். பொறுப்பு மிக்க நாடாக, நடுநிலையான, வெளிப்படையான நம்பகமான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பஹல்காம் விவகாரத்தில் தங்களை தேவையில்லாமல் இழுப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து மழுப்பி வந்த நிலையில், தற்போது நடுநிலையான விசாரணைக்கு தயார் என சொல்லியிருப்பது இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளை கண்டு அஞ்சி பாகிஸ்தான் இறங்கி வருவதை காட்டும் விதமாக அமைந்து இருக்கிறது.
