தூத்துக்குடி டூ மாலத்தீவுக்கு கடத்தல்.. நடுக்கடலில் படகில் சிக்கிய ரூ.80 கோடி போதைப்பொருள் தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தமிழகத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்கள்
�
கடத்தப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது.அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு போதைப்பொருட்கள் கடல் மார்க்கமாக வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.இருப்பினும் கூட அதிகாரிகளையும் தாண்டி சில சமயங்களில் போதைப்பொருள் கடத்தல் என்பது வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தூத்துக்குடி அருகே கண்காணிப்பு பணியில்
�
ஈடுபட்டனர். அப்போது நடுக்கடலில் சிறியவகை கப்பல் சென்றது. அந்த கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவது தெரியவந்தது. கப்பலில் இரந்த ஹசீஸ் எனும் செறிவூட்டப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக இந்தேனசியாவை சேர்ந்த 2 பேர் உள்பட
�
மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு போதைப்பொருளை கடத்தி செல்வதும், அதன் மதிப்பு ரூ.80 கோடி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருள் எப்படி கிடைத்தது? அவர்களின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
