கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

download-5-9.jpeg

தி ஹென்லி கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் இலங்கை 91வது இடம் ஒவ்வொரு நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு தி ஹென்லி The Henley தரவரிசைப் பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானப் பயண கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது.

அதன்படி, இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 42 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இந்தப் பட்டியலில் ஜப்பான் மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்திலும், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், பயண விசா தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *