சூட்சுமமான முறையில் ஜன்னல் கலட்டப்பட்டு மாவடிப்பள்ளியில் திருட்டு.!

481334855_960769922867376_8496152409086817936_n.jpg

எந்தவித அடையாளமும் இன்றி சூட்சுமமான முறையில் ஜன்னல் கலட்டப்பட்டு மாவடிப்பள்ளியில் திருட்டு.!

காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் நகை, பணம் காணாமல் போய் உள்ளதாக (05) திகதி போலீசாருக்கு முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளது.

இந் நிலையில் குறித்த காணாமல் போன நகைகள் அடங்கிய வீடானது காரைதீவு போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேச வீடு என்பதும் காரைதீவு பொலிசாருக்கு தெரிய வந்ததை அடுத்து பொலிஸார் உடன் விஜயம் மேற்கொண்டு கள்வர்களை தேடும் பணி தீவிரம்.

மற்றும் இத் திருட்டுச் சம்பவமானது நேற்றைய கடந்த 2025-03-04 திகதி இரவு இடம் பெற்றுள்ளது.

(05) திகதி ஒரே இரவில் இரு வீட்டுக்குச் சென்ற கள்வன் ஒரு வீட்டின் உரிமையாளர் விழித்துக் கொண்டார்.

மற்றைய வீட்டின் உரிமையாளர்கள் நோன்பு காலம் என்பதால் தராவீஹ் தொழுதுவிட்டு வந்து வந்து இரவு 12 மணியளவில் உறங்கிக் கொண்டு இருந்த சந்தர்ப்பத்தில் சூட்சுமமான முறையில் வீட்டில் உள் நுழைந்த கள்வர்களினால் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குடும்பத்தினர் அதிகாலை எழுந்து பார்த்ததும் வீட்டின் நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரியும் மற்றும் குறித்த வீட்டின் ஜன்னல் கழட்டபட்டு கதவும் திறந்த நிலையில் காணப்பட்டதாகவும், ஜன்னல் கிரில் கழட்டபட்டு உள் நுழைந்து சென்றுள்ளார்கள் கள்ளர்கள் என்ற சந்தேகமும் அவ்வீட்டார்களுக்கு எழுந்துள்ளது.

இதன் பின்னரே குறித்த நகைகளை பரிசோதித்த போது தங்க நகைகள் , பணம் காணாமல் போய் உள்ளதாக குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தத நிலையில் உடனடியாக போலீசாருக்கு குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக அறிவித்துள்ளனர் குடும்பத்தினர்.இதனை அடுத்து காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். எஸ். ஜெகத் தலைமை பிரிவின் குறித்த திருடு போன நகைகளை மீட்டெடுக்கும் விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் அதே தொடர்ந்து பொலிஸார் பொது மக்களை இரவு 11 மணிக்கு மேல் நடமாட்டம் செய்யும் நபர்களை உடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு கொடுக்கப்படும் என்று மக்களை வினயமாக சொன்னதோடு இரவு நேரங்களில் பொலிஸ் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு விழிப்புடன் இருக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டது.

அத்தோடு குறித்த குடும்பத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரோ அல்லது ரகசியமாக நுழைந்த நபர் ஒருவரினாலே திருட்டு சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என போலீசார் தற்போது சந்தேகித்து வருகின்றனர்.

மற்றும் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக காரைதீவு குற்றத்தடுப்பு பிரிவும் போலீஸ் பிரிவும் ஆரம்பகட்ட விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

( முஹம்மத் மர்ஷாத் )

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *