கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு நேற்று (19) சென்றிருந்த பிரதியமைச்சர் ஒருவர் தனது வாகன் ஓட்டுநரை கழுதை என அழைத்ததாக கூறப்படுகின்றது.
பொதுப் பாதுகாப்பு மற்று நடாளுமன்ற விவகார பிரதியமைச்சர் சுனில் வட்டகல, அவரது வாகனத்தை அழைக்கும்போது அவரது ஓட்டுநரை கழுதை என அழைத்துள்ளமை கேட்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் இயலுமையை சில ஊடகவியலாளர்கள் கேள்விக்குட்படுத்தியபோதே, சத்தமாக வட்டகல கழுதை இங்கே வா எனக் கத்தியுள்ளார்.
