இந்த ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் நாளை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கும் கன்னி வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
அதன்படி, நாளை காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூட உள்ளது.
இதற்கிடையில், வரவு செலவுத் திட்ட ஆவணத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டத்திற்கான முதற்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
