அண்ணாவின் பேச்சை பதிவு செய்து அமைச்சர் பதிலடி

480451486_948409007436801_8683507972007356035_n.jpg

இன்னொரு மொழிப்போரை தூண்டுவதுபோல்தான் இருக்கிறது” – அண்ணாவின் பேச்சை பதிவு செய்து அமைச்சர் பதிலடி!

தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளது பலத்த கண்டனத்தை பெற்றுள்ளது.தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளது பலத்த கண்டனத்தை பெற்றுள்ளது.

தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளிகல்வி திட்ட நிதி ஒதுக்கப்படும் என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ”மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு வற்புறுத்துகிறது. இருமொழிக் கொள்கையால் தமிழகத்தில் என்ன தீங்கு ஏற்பட்டுள்ளது. நிதியை பெற நீதிமன்றத்தை

அணுகுவது குறித்து, முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.இதில் சுமார் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது. மும்மொழிக் கொள்கை என்பது நமக்கு தேவையில்லாதது. எங்களை மிரட்டி அடிபணிய வைக்கப் பார்க்கிறீர்கள். இது கட்சிக்கான நிதி அல்ல. மாணவர்களுக்கான நிதி. அரசியல் பார்க்காமல் உரிய நிதியை ஒதுக்க வேண்டும்.மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று நீங்கள் சொல்வதே, இன்னொரு மொழிப்போரை தூண்டுவதுபோல் தான் அமைந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.மேலும்

இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர், “ வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்? மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்? அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *