அடுத்த அறிவிப்பு வரும் வரை’ இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது அறிவித்துள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக, ஹமாஸ் குழுவின் தலைமை, எதிரி படைகளின் வீதி மீறல்களையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதையும் கண்காணித்து வருகிறது.
வடக்கு காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு செல்வதை தாமதப்படுத்துதல், காஸா முனையின் பல்வேறு பகுதிகளில் ஷெல் குண்டுகள் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் தாக்குதல் நடத்துவது, அந்த பகுதியில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கத் தவறுதல் ஆகியவை இந்த வீதி மீறல்களுள் அடங்கும்.” என ஹமாஸ் தெரிவித்துள்ளது
ஆனால் ”ஹமாஸ் குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் முழுமையாக கடைபிடித்து வருகிறது. அதன்படி, வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 15) இஸ்ரேலிய பணையகைதிகளை விடுதலை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது, தற்போது அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது”, என்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
