அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம்

download-39.jpeg

அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம் கிளிநொச்சிக்கு நேற்று முன் தினம் (09) விஜயம் மேற்கொண்டிருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு நிலையத்தின் நிலைமைகளை பார்வையிட்டு கலந்துரையாடினார்.

கிளீன் சிறிலங்கா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் குறித்த புகையிரத நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், பயணிகளுடனும் கலந்துரையாடினார்.

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் நாடு முழுவதும் காணப்படுகிறது. அது போல கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊதியம் போதாது. அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அந்த பிரச்சினைக்கு மக்களுடனும் கலந்துரையாடி தீர்வு எட்டப்பட வேண்டும். அதனை விரைவில் செய்வோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் கிளிநொச்சி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத விடயம் தொடர்பில் அமைச்சர் அவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் உடனடியாக சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *