தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் செல்வம் அடைக்கலநாதன்

476080234_944518004492568_3616139393816682024_n.jpg

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டியதுடன் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்று அந்த கூட்டணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (10) ஐனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர், ”யாழ்.தையிட்டி விகாரைக்கு எதிராக இடம்பெறும் போராட்டத்திற்கு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை தெரிவிக்கும். அது உண்மையில் உடைக்கப்படவேண்டிய விடயம்.

வடகிழக்கில் பிக்குகள் மற்றும் சில திணைக்களங்கள் நினைத்ததை செய்யும் ஒரு நிலை காணப்படுகின்றது. எனவே இந்த விகாரை உடைக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்கான ஆதரவை நாங்கள் வழங்குவோம் மக்களுடைய விருப்பமும் அதுவே.” என தெரிவித்துள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *