பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த சம்பவம் தகவல் மஹிந்த கவலையடைந்தார்

download-9-6.jpeg

பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல் வந்தபோது எனது தந்தை கவலையடைந்தார் போரின் போது பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல் வந்தபோது எனது தந்தை மஹிந்த ராஜபக்ச கவலையடைந்தார்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யூடியூப் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்

கேள்வி = “ போர் காலத்தில் உங்கள் தந்தை ஜனாதிபதி. அவர் செயல்பட்ட விதத்தை கண்டிருப்பீர்கள். உங்கள் தந்தை மிகவும் கவலையடைந்த சம்பவமொன்று நினைவிருக்கின்றதா ? ”.

பதில் = “ ஒன்று கெப்பட்டிபொல சம்பவம், இரண்டாவது பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்துவிட்டார் என தகவல் வந்தபோது கவலையடைந்தார். அந்த பிள்ளைகள் போரில் சம்பந்தப்படவில்லை என அவர் (மஹிந்த) கருதினார். அதிகாலைதான் தொலைபேசி அழைப்பு வந்தது.

வேண்டுமென்றே இதனை செய்யவில்லை. ‘குரோஸ் பயரிங்’கின் போது நடந்த சம்பவம் அது. வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கலாம். அல்ல அல்ல, இது குரோஸ் பயரிங்கின்போதே நடந்தது. பின்னரே அது பற்றிகூட தெரியவந்தது. போர் காலம் தொடர்பில் இவ்விரு சம்பவங்களே எனக்கு நினைவில் உள்ளன.”

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *