ஈரோடு மக்கள் நாம் தமிழருக்கு அதிக ஓட்டு போட்ருக்காங்க! இதுவே எங்களுக்கு வெற்றி! சீதாலட்சுமி பேட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றியை உறுதி செய்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சீதாலட்சுமி தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய சீதாலட்சுமி, ஏறக்குறைய
நாம் தமிழர் வெற்றியை தழுவியுள்ளது என கூறியுள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தவிர நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சைகளும் களத்தில் இருக்கின்றனர்.தேர்தலில் பதிவான வாக்குகள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தனது வெற்றியை உறுதி செய்து இருக்கிறார் 75 ஆயிரம் வாக்குகளுக்கு
மேல் பெற்றுள்ள நிலையில் அவரது வெற்றி உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 15,000 க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். இது கடந்த தேர்தலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, ஏறக்குறைய நாம் தமிழர் வெற்றியை தழுவியுள்ளது என கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” இந்த தேர்தலை பொருத்தவரை நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவே கிடையாது. திமுக பயந்துவிட்டது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகமான வாக்குகளை நாம்
தமிழர் கட்சி பெற்றிருக்கிறது. மக்களிடம் நாங்கள் சென்று சேர்ந்து இருக்கிறோம். மக்கள் எங்களுக்கு வெற்றி அளித்திருக்கிறார்கள்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களை சிந்திக்க வைத்ததே நாம் தமிழர் சீமானின் வெற்றி தான். எங்கள் வாக்கு சதவீதம் கடந்த முறையை விட இந்த முறை உயர்ந்து இருக்கிறது. இதனால் திமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். பெரியாரை சீமான் விமர்சித்ததால் நாங்கள் தோற்கவில்லை. அதே சமயத்தில் எங்கள் வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. பண பலத்தை தாண்டி எங்களுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
