துன்பம் விலக போகும் ராசிகள் ரிஷபம் மிதுனம் துலாம் விருச்சிகம்

download-13-1.jpeg

துன்பம் விலக போகும் ராசிகள்..!
on February 07, 2025

நவகிரகங்களில் கர்ம காரகன், நீதிமான் என அழைக்கப்படக்கூடியவர் சனி பகவான். இவர், மார்ச் 29 ஆம் திகதி கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதற்கு முன் பிப்ரவரி 12 இல் சூரியன் கும்பத்தில் வந்த பின்னர், பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் சூரியனின் ஆதிக்கத்தால் சனி அஸ்தமனம் ஆகிறார். இதனால் சில ராசிகளுக்கு மோசமான பலன்கள் கிடைக்கும்.

சனி மீன ராசியில் பெயர்ச்சி ஆன பின்னர் 6 ஆம் திகதி காலை 5:05 மணிக்கு உதயமாக உள்ளார். இதனால் நன்மைகளும், அதிர்ஷ்டமும் பெற உள்ள ராசிகளை இங்கு பார்ப்போம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனியின் உதயம் நடக்கிறது. இதனால் உங்களுக்கு பல விதத்தில் சதகமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பணியிடத்தில் பல நன்மைகள் தரக்கூடிய சூழல் உருவாகும். சக ஊழியர்கள், மூத்த அதிகாரிகளுடன் நல்லுறவு ஏற்படும். வேலையில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும்.

நிதி நிலை தொடர்பான பிரச்னைகள், கவலைகள் விலகி மகத்தான வெற்றியை பெறலாம். கல்வித் துறையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். பிள்ளைகள் தொடர்பாக எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் தீரும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் வெற்றி அடைவீர்கள். உங்கள் பயணங்கள் மூலம் மகிழ்ச்சியும், நிதி ஆதாயமும் பெறுவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி உதயம் ஆவதால் உங்களுக்கு பல விதத்தில் நன்மை பயக்கும். உங்களுக்கு வருமானத்தைத் தரக்கூடிய வேலை அல்லது தொழில் தொடரான விஷயத்தில் மகத்தான வெற்றியை அடைவீர்கள். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.

குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் விலகி மன அழுத்தம் குறையும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் உருவாகும். ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். பல விதத்தில் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு, சனி பகவான் ஆறாவது வீட்டில் உதயமாகக்கூடிய நிலையில் உங்களுக்கு மகத்தான வெற்றிகள் குவியும். உங்களின் எதிரிகளை வெல்வீர்கள். பணியிடத்தில் உங்களின் செயல்கள், திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அதோடு உங்களுக்கு பதவி, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

நிதி நிலை முன்னேற்றத்தால் பணத்தை எதிர்பார்த்த விதத்தில் சேமிக்க முடியும். நீதி மன்ற வழக்குகள், சொத்து தொடர்பான பிரச்சினைகளில் வெற்றி பெறலாம். மாணவர்கள், இளைஞர்கள் போட்டித் தேர்வு, விளையாட்டு தொடர்பான விஷயங்களில் சிறப்பன வெற்றியை பெறலாம். உங்களின் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 5 ஆம் வீட்டில் சனி உதயமாகக்கூடிய காலத்தில் உங்களின் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் அடைவீர்கள். இலக்குகளை அடைய முடியும். உங்களின் வாழ்க்கை தொடர்பான போராட்டங்கள், முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பம், பணியிட பொறுப்புகள் நிறைவேற்றுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. வருமானம் மிக வேகமாக அதிகரிக்கும்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *