தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தும் ஒரு செயல் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

images-14.jpeg

இலங்கையின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளை அகற்றும் முடிவு, தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தும் ஒரு செயல் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

அதிகாரப்பூர்வ இல்லம்

தனது அதிகாரப்பூர்வ இல்லத்தைப் பொறுத்தவரை, அரசாங்கத்தால் முறையாக அறிவுறுத்தப்பட்டால் தான் எதிர்க்கப் போவதில்லை என்றும் ராஜபக்சே கூறினார்.

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தால் அந்த வீடு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டபோது தான் அதை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.இருப்பினும், பகிரங்கமாக தன்னை வெளியேற்றும் எந்தவொரு முயற்சியும் தன்னை சங்கடப்படுத்தும் செயலாகவே கருதப்படும் என்று அவர் இதன் போது வலியுறுத்தினார்.

இதற்கிடையில், இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அரசாங்கம் வீட்டை காலி செய்யுமாறு அதிகாரப்பூர்வமாகக் கேட்டால், உடனடியாக அதற்கு இணங்குவதாக விளக்கினார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பிற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *