நீர் நிலையிலிருந்து ஆண் ஓருவரின் சடலம் மீட்பு.

download-24.jpeg

நீர் நிலையிலிருந்து ஆண் ஓருவரின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நீர் நிலையிலிருந்து சடலம் ஒன்று இன்று வியாழக்கிழமை(06.02.2025) பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பட்டாபுரம் கிராமத்தைச் சேரந்த 56 வயதுடை 4 பிள்ளைகளின் தந்தையான சேதுநாதபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று ( 06 ) அதிகாலை மீன் பிடிப்பதற்காக அவரது வீட்டிலிருந்து குறித்த நபர் புறப்பட்டுள்ளார் மீன் பிடிக்கச் சென்றவரைக் பகல் வேளையாகியும் காணவில்லை என உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர். இந்நிலையிலேயே அவர் நீர் நிலையில் உயிரிழந்த நிலையில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.

சம்பவம் அறிந்த களுவாஞ்சிக்குடி பொலிசார் ஸ்த்தலத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *