இராணுவபுலனாய்வு பிரிவின் சுரேஸ் சாலே பிள்ளையானிடம் தெரிவித்தார்

25-67a47cb28f2bb-1.jpeg

கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றிய சுரேஸ் சாலே பிள்ளையானிடம் தெரிவித்தார் என தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கருணா அம்மான் கைது

2007 நவம்பர் 2ம் திகதி போலிகடவுச்சீட்டில் பிரித்தானியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அந்த நாட்டில் கைது செய்யப்பட்டார். இலங்கையின் தேசிய புலனாய்வு சேவையே இந்த கடவுச்சீட்டை வழங்கியிருந்தது.கருணா அம்மானை அகற்றிவிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக பிள்ளையானை கொண்டு வருவதற்கு இலங்கையின் தேசிய புலனாய்வு அமைப்பு விரும்பியது.

கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக விளங்கிய சுரேஸ்சாலே பிள்ளையானிற்கு தெரிவித்தார் என இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.கருணா அம்மானின் மெய்ப்பாதுகாவலர்களை பிள்ளையான் கொலை செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பிள்ளையானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது அவர் அதன் தலைவரானார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *