அவுஸ்திரேலியா அமைச்சர் பதவி துறப்பு – மக்களிடம் மன்னிப்பும் கோரினார்

download-6-7.jpeg

சொந்த தேவைக்கு அரச காரைப் பாவித்த அவுஸ்திரேலியா அமைச்சர் பதவி துறப்பு – மக்களிடம் மன்னிப்பும் கோரினார் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹைலன் தனது பதவியை நேற்று (04) இராஜிநாமா செய்துள்ளார்.

அரசினால் அவரது பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டிருந்த காரை தனது சொந்த பயணத்திற்கு பயன்படுத்திய விவகாரத்தில் அவர் தமது பதவியை இராஜிநாமா செய்ததோடு மக்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

இது தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது, அமைச்சர் ஜோ ஹைலன் அரசினால் தமக்கு வழங்கப்பட்ட காரையும் அதன் சாரதியையும் பயன்படுத்தி தனது நண்பர்கள் சிலருடன் சிட்னியிலிருந்து அங்குள்ள ஹண்டர் வேல்லி எனும் இடத்திற்கு கடந்த மாதம் 25 ஆம் திகதி தனிபட்ட விருந்திற்குச் சென்று திரும்பியுள்ளார்.

இதன் ஊடாக 13 மணித்தியாலயங்களில் சுமார் 446 கிலோ மீற்றர் தூரத்திற்கு அவரது கார் அரச சாரதியினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் முதல்வர் கிறிஸ் மின்ஸ் மக்களது வரிப்பணத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரச காரை அவர்களது தனிப்பட்ட பயணங்கள் மற்றும் வேலைகளுக்கு பயன்படுத்துவதை தடை செய்யும் சீர்திருத்தங்களை ஏற்கனவே மேற்கொண்டுள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *