அமெரிக்காவின் செயலுக்கு பதிலடி கொடுத்த சீனா சீனப் பொருட்களுக்கு 10 விழுக்காடு வரியை அமெரிக்கா உயர்த்தியதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது.சீன அரசு மேற்கொண்டுள்ள வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரி,
இயற்கை எரிவாயு பொருட்கள் மீது 15 விழுக்காடு வரியும், குறிப்பிட்ட ரக கார்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது 10 விழுக்காடு கூடுதல் வரியும் விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்படும் பெரிய என்ஜின்கள் கொண்ட கார், சரக்கு வாகனங்கள், நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை
எரிவாயு, கச்சா எண்ணெய், விவசாய இயந்திரங்கள் ஆகியவற்றின் இறக்குமதி பாதிக்கப்படும்.அமெரிக்கா மற்றும் சீனாவின் இத்தகைய நடவடிக்கை வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே, அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் சீனா முறையிட்டுள்ளது.
