நூர் மொஹமட் ஆலம் தெரிவித்தார்.இந்திய மீனவர்களே இலங்கை எல்லை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள்

download-2-1.jpeg

இந்திய மீனவர்களே இலங்கை எல்லை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள் – மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் நூர் மொஹமட் ஆலம் இலங்கை கடற்பரப்பில் .அத்துமீறி நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையாக உறுதுணையாக இருப்போம் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் நூர் மொஹமட் ஆலம் தெரிவித்தார்.

-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (31) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இந்திய மீனவர்கள் கடந்த வாரம் இலங்கை கடற்பரப்பில் நுழைந்த போது ஏற்பட்ட அசம்பாவிதத்தை இந்திய தரப்பு பூதாகாரமான விடையமாக மாற்றியுள்ளனர்.

அதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அவர்களின் வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்துள்ளது.

நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.இந்திய மீனவர்களை அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைய வேண்டாம்.

அவர்கள் நுழைகின்ற சமயத்தில் இலங்கை கடற்படை அவர்களை கட்டுப்படுத்த அசமந்தப் போக்குடன் நடந்து கொண்டு இருக்கிறது.இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்தையும் நாங்கள் விமர்சித்து குறை கூறி வருகிறோம்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுல் நுழைகின்ற நாட்களில் இலங்கை மீனவர்கள் குறிப்பாக வட பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை அந்த மீனவர்களுக்கு ஏற்படுகின்ற சொத்து இழப்புக்களை கணக்கிட்டு பார்த்தால் சுமார் 700 மில்லியன் ரூபாய் சொத்துக்களை வடபகுதி கடலில் இழந்திருக்கிறோம்.இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கையினால் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் இவ்வளவு நாசமாகியுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *