மோனாலிசா ஓவியம் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

download-3-35.jpeg

பிரான்ஸில் லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மோனாலிசா ஓவியம் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

உலகின் அதிக பார்வையாளர்களை கவர்ந்த லூவர் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படவுள்ளமையினால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மோனலிசா ஓவியம் இன்று பிரான்ஸில் லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2031 ஆம் ஆண்டுக்குள் மோனலிசா ஓவியம் இடமாற்றம் செய்யப்படும் எனவும் பார்வையாளர்கள் ஓவியத்தைப் பார்வையிட தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டண மாற்றங்களும் அறிமுகப்படுத்தப்படும், எனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிப்பவர்கள் அல்லாதவர்கள் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *