திங்கள்கிழமையன்று, பிரதமர் மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலில், அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று பிரதமர் மோதிக்கு டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் முறையாக நடைபெற வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதாவது, அமெரிக்காவிற்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்படக்கூடாது என டிரம்ப் விரும்புகிறார்.கடந்த திங்கள்கிழமையன்று, பிரதமர் மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது இந்த உரையாடலுக்குப் பிறகு வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.மேலும், டிரம்ப் பதவிக்கு வந்த பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடக்கும் முதல் உரையாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
