வேலை இழந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே நாளில் நடுத்தெருவிற்கு

t1-1738064169.webp

ஒரே நாளில் நடுத்தெருவிற்கு வந்தனர்.

கோவையில் முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட அமெரிக்க நிறுவனத்தால் வேலை இழந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே நாளில் நடுத்தெருவிற்கு வந்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலங்கி நின்றபடி அவர்கள் கொடுத்த பேட்டி பலரையும் நெகிழ வைத்தது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த அரசு, தொழிலாளர் நலத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து

குறிப்பிட்ட ஐடி நிறுவனம் பணியாற்றிய 3,000 ஊழியர்களுக்கு ஜனவரி 31-ல் நிலுவை ஊதியம், மற்றும் பணிக்கொடை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.கோவை ஆர்.எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதிகளில் ‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் கிளைகள், பெங்களூர் மற்றும் சென்னையிலும் உள்ளன. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட அந்த ஐடி நிறுவனத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அமெரிக்காவில்

உள்ளவர்களுக்கு இங்கிருந்தபடி ஆன்லைனில கல்வி கற்பிக்கும் தனியார் பயிற்சி மையமாக இயங்கி வந்தது.2010ம் ஆண்டு ஆரம்பித்த கம்பெனி 15 வருடங்களாக இயங்கி வந்தது. திடீரென கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர்களுக்கு ஒரு அழைப்பு வந்தது.. பிற்பகல் மதியம் 12 மணி வரை ஐடி சர்வீஸ்க்காக shutdown செய்கிறோம் என்று அழைப்பு வந்ததாம்.பின்னர் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக் கொள்ளுங்கள்.. இல்லை என்றால் லீவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்களாம்.. இதனால் எல்லாருமே

வீட்டிற்கு போய் வேலை செய்துள்ளார்கள். சனி மற்றும் ஞாயிறு விடுமுறையாகும். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்கள்.. அவசர மீட்டிங் என்று கூறி ஏற்பாடு செய்திருந்திருக்கிறார்கள். அதன்பிறகு 9.15க்கு மெயில் வருகிறது.. உடனடியாக நிறுவனம் shutdown செய்யப்படுவதாக கூறினார்களாம் அதாவது கோவையில் உள்ள ஃபோக்கெஸ் எடுமாட்டிக்ஸ் நிறுவனக்கிளை ஒரே நாளில் நிரந்தரமாக மூடப்படுவதாக மெயில் வந்தது.. கோவையில் உள்ள எல்லா ஊழியர்களும் உடனடியாக பணி நீக்கம்

செய்யப்படுவதாகவும் கூறினார்களாம்.இதனால் ஒரே நாளில் அவர்களுக்கு வேலை போய்விட்டது.. Focus Edumatics நிறுவனம் பணியாளர்களுக்கு அனுபவ சான்றிதழ், சம்பளம், கிராஜூவிட்டி, மெர்டனிடிட்டி லீவில் உள்ளவர்களுக்கு சம்பளம் என எதுவுமே வரவில்லை. அதில் வேலை செய்யும் ஊழியர்கள் எல்லாம் தலைமறைவாகி விட்டதாக நிறுவனத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து Focus Edumatics நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

அந்த ஊழியர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பள தொகையை பெற்று தர வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கு செட்டில்மென்ட், கிராஜுவிட்டி உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தர வேண்டும்.” என்று அவர்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த அரசு, தொழிலாளர் நலத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து குறிப்பிட்ட ஐடி நிறுவனம் பணியாற்றிய 3,000 ஊழியர்களுக்கு ஜனவரி 31-ல் நிலுவை ஊதியம், மற்றும் பணிக்கொடை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *