பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் சொன்ன ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பிரத்யேகமாக நியூஸ்18 தமிழ்நாட்டிற்கு பேட்டி அளித்தார். ‘களம் 18’ நிகழ்ச்சியில், நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகைச்செல்வனுக்கு நேர்காணல் அளித்த அவர் சீமான் பிரபாகரன் உடன் எடுத்த
புகைப்படம் குறித்து பேசினார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது. அதனை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த விவகாரம் பெரும்
பேசுபொருளாக மாறியது. இது தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியில், “சீமான், பிரபாகரன் சந்திப்பு நடந்தது உண்மைதான். ஆனால், அது வெறும் 8 முதல் 10 நிமிட சந்திப்பு தான்.ஒரு
ஆவணப்படம் எடுப்பதற்கான வேலைகள் நடந்துக்கொண்டிருந்தபோது தான் சீமான் அங்கு சென்றார். அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ், அந்தக் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார். சந்தோஷ் தற்போது கனடாவில் உள்ளார். அவர் வாயைத் திறந்தால் இன்னும் பல விஷயங்கள் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.” என்று பகிரங்கமாக தெரிவித்தார்.
