திருச்செந்தூர் கடலில் ஒதுங்கும் அமானுஷ்ய சிற்பங்கள்! என்ன நடக்கிறது தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் அமானுஷ்ய சிற்பங்கள் கரை ஒதுங்கும் நிலையில் தலை, கைகள் இல்லாத சிலைகளும் கரை ஒதுங்குகிறது. இது அவ்வப்போது நடப்பதால் திருச்செந்தூரில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது.முருகனின் அறுபடை
வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் குடும்பத்துடன் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக
கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடற்கரையில் சுமார் 50 அடிக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பக்தர்களை பாதுகாப்பாக நீராடும் படி கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த கடல் அரிப்பு காரணமாகவும், கடல் சீற்றத்தின் காரணமாகவும் திருச்செந்தூர் கடலுக்குள் இருந்து ஏராளமான பழங்கால சிற்பங்களும், கல்வெட்டுகளும் வெளியே வந்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் 20-க்கும் மேற்பட்ட சிலைகளும், 4 கல்வெட்டுகளும் தற்போது வரை வெளியே வந்துள்ளன.
