இந்திய கப்பல் ஹார்முஸ் துறைமுகத்தை கடந்து இப்போது மும்பையை அடைந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க மாட்டோம் என ஈரான் அறிவித்திருந்தது. இருப்பினும், இதில் இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு தருவதாக ஈரான் அறிவித்திருந்த சூழலில், முதல் இந்திய கப்பல் ஹார்முஸ் துறைமுகத்தை கடந்து இப்போது மும்பையை அடைந்துள்ளது.
சவுதி, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளிடம் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் – கேஸ் சப்ளை வருகிறது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி ஈரானுக்கு சொந்தமானது.

இதற்கிடையே மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் சூழல் உருவானது. இது தொடர்பாக மத்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்திய கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் ஹார்முஸ் வழியாக இந்திய கப்பல் பாதுகாப்பாகப் பயணித்துள்ளது. அந்த ஆயில் டேங்கர் கப்பல் இப்போது மும்பையை அடைந்துள்ளது.!
