31.4 C
Chennai
March 16, 2026
இலங்கை

கனடா மொன்றிஸ் நகர சபை உறுப்பினராக மிலானி தியாகராஜா

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றிஸ் நகர சபைக்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நகர சபைக்கு தெரிவான முதல் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட சட்டத்தரணியான லிங்கராஜா தியாகராஜா மற்றும் சண்டிலிப்பாயைச் சேர்ந்த பாமதி சிவபாதம் ஆகியோரின் மகளே மிலானி தியாகராஜா.

கனடாவின் கோட் டெஸ்-நெய்ஜ் பகுதியில் பிறந்து வளர்ந்த மிலானி தியாகராஜா தமது கடின முயற்சியால் இந்நிலைக்கு உயர்ந்துள்ளார். ‘அன்சாம்பில் மொன்ட்ரியல்’ கட்சியின் உறுப்பினராக மிலானி இணைந்து, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு டார்லிங்டன் மாவட்டத்தை கட்டியெழுப்பும் வாக்குறுதியுடன் பிரச்சாரத்தில் இறங்கினார். கனடா சேவை மையத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய இவர், மக்களுக்கு சேவை செய்வதில் நீண்ட அனுபவம் பெற்றவர்.

தனது வெற்றியையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மிலானி தியாகராஜா, “இது ஒரு வெற்றி மட்டுமல்ல, ஒரு புதிய தொடக்கம். டார்லிங்டனில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் குரலும் மதிக்கப்படும், பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்கிறேன். நமது சமூகத்தின் இணைப்பை வலுப்படுத்தியே இந்தப் பணியை மேற்கொள்வேன். நகரத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்தல். வீடற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க

Related posts

கொலை மிரட்டல் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு

இந்தியாவில் தொடங்கி விட்டது ஏ ஐ யின் ஆட்டம் ரூ.1.3 லட்சம் கோடி.. ஆந்திராவில்

finhelvantaan

12-04-2025.சனிக்கிழமை. Pothikai.fm மேஷ ராசி நண்பர்களே

Leave a Comment