ஆகஸ்ட் 11 முதல் 17 ஆம் தேதி வரையிலான ஆடி 26 முதல் ஆவணி 1 வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். அந்த வகையில், ஆகஸ்ட் 11 முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மகரம் மகர ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு சூரியன், புதன் இரண்டும் நேரடி பார்வை செய்வதால் உங்களைப் பார்த்தாலே 10 பேர் பயப்படும் சூழல் உருவாகும். உண்மையை சொல்லி விடுவார் என்கிற அச்சம் உங்கள் மேல் ஏற்படும். புதிய தொழில், வியாபாரம் தொடங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். விசித்திரமான விஷயங்களையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள்.
யோகம் பிள்ளைகளை விடுதியில் சேர்ப்பது, அரசு பள்ளிகள், கல்லூரிகளில் சேர்ப்பது போன்றவற்றை செய்வீர்கள். பொதுத் துறை, முனிசிபல் கார்ப்பரேஷன், குடிநீர் வழங்கல் துறை போன்றவற்றில் வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டு. பாதிப்புகள் அனைத்தும் நீங்கி டாப் கிளாஸ் யோகம் பெறும் காலகட்டமாக இருக்கும். வேகத்தை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் கணவன், மனைவியின் ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சனைகள், சொல்லக்கூடிய விஷயங்களை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வது போன்றவை மாறும் காலகட்டமாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதாரம் 80 சதவீதம் நன்றாக இருக்கும். நாமகிரியம்மன் வழிபாடு அமோகமான முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். கவனம் மேலதிகாரிகள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடுவோரின் நிழல் கூட அண்டாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அஷ்டமத்தில் இருக்கும் சூரியன், கேதுவால் பதட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. கூடா நட்பு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

