டொனால்ட் டிரம்புக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இப்போது போர் வந்தால் அமெரிக்காவால் 8 நாட்கள் மட்டுமே எதிரிகளை அழிக்கவும், எதிரிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவும் முடியும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நெருங்கிய நண்பரும், பென்டகனின் முன்னாள் அட்வைசருமான டக்ளஸ் மெக்ரிகோர் வார்னிங்
�
செய்துள்ளார். இது டொனால்ட் டிரம்புக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்க ராணுவம், விமானம் மற்றும் கப்பற்படையில் உலகிலேயே பெரியதாக உள்ளது. அமெரிக்காவை எடுத்து கொண்டால் கடந்த முறை பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு மட்டும் 961 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த பட்ஜெட் 1.01 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது இதனால் உலகிலேயே பலமான ராணுவம் என்றால் அது
�
அமெரிக்கா தான். வேறு எந்த நாடுகளும் பாதுகாப்பு துறைக்கு இவ்வளவு பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்வது இல்லை. அமெரிக்காவை போல் வல்லரசு நாடுகளாக இருக்கும் சீனா, ரஷ்யாவும் பின்தங்கி தான் இருக்கின்றன. இப்படி பலமான ராணுவம், விமானப்படை, கப்பற்படையை வைத்துள்ள அமெரிக்காவுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. இப்போது போர் வந்தால் அமெரிக்காவால் வெறும் 8 நாட்கள் மட்டுமே சமாளிக்க முடியும். 8 நாட்களுக்கு பிறகு அணு ஆயுதத்தை தான் பயன்படுத்த
�
வேண்டிய நிலை வரும் என்று வார்னிங் செய்யப்பட்டுள்ளது. இந்த வார்னிங்கை செய்துள்ளவரின் பெயர் டக்ளஸ் மெக்ரிகோர். இவர் யார் என்றால் அமெரிக்கா ராணுவத்தில் கர்னலாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அதுமட்டுமின்றி டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக அதிபரான போது பென்டகனின் சீனியர் அட்வைசராக பணியாற்றினார். அதாவது அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சரின் சீனியர் அட்வைசராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.டிரம்ப் தான், டக்ளஸ்
�
மெக்ரிகோருக்கு இந்த பொறுப்பை வழங்கியிருந்தார். இந்நிலையில் தான் டக்ளஸ் மெக்ரிகோர் தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், ‛‛அமெரிக்கா வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் நம்மிடம் தாக்குதல் நடத்துவதற்கும், தற்காப்புக்குமான ஏவுகணைகள் சுமார் 8 நாட்களுக்கு மட்டுமே உள்ளதாக நம்பகமான வட்டாரம் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதனை இன்னும் சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் நாம் 8 நாட்கள் மட்டுமே போரை நடத்தலாம். அதன்பிறகு அணுஆயுதங்களை தான் கையில் எடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் திடீர் ஆயுத
�
பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் அந்த நாடு பிற நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கி வருவது தான். குறிப்பாக போர் தொடுத்துள்ள ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கு கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு தொடக்கம் வரை அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது. இதில் ஏவுகணைகளும் அடங்கும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் அதிபரானதும் சிறிது காலத்துக்கு பிறகு உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தினார்.ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு
�
கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வருகிறார். ஆனால் ரஷ்யா போரை நிறுத்த விரும்பவில்லை. இதனால் ரஷ்யா மீது கோபம் கொண்டுள்ள டிரம்ப் மீண்டும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதாக அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த முடிவை உக்ரைன் வரவேற்றுள்ள நிலையில்தற்போது இவரது இந்த வார்னிங் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். ஏனென்றால் சமீபத்தில் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை துறை தலைமையகமான
�
பென்டகன் சார்பில், நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணை, பேட்ரியாட் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு, 155 மிமீ குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களின் கையிருப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளவாடங்களின் உற்பத்தி தடைகள் மற்றும் விநியோகம் தாமதங்கள் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளதாக பென்டகனே தெரிவித்து இருந்தது. இதற்கிடையே தான்
�
அமெரிக்காவால் போர் நிலைமையை 8 நாட்கள் மட்டுமே சமாளிக்க தேவையான தற்காப்பு மற்றும் பதிலடி கொடுக்கும் ஏவுகணைகள் கைவசம் உள்ளதாக முன்னாள் பென்டகன் சீனியர் அட்வைசர் டக்ளஸ் மெக்ரிகோ கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
