வரதட்சணை கேட்டு பெண் மீது தாக்குதல்: காவல் ஆய்வாளர், போலீஸ்காரர் உட்பட 4 பேர் மீது வழக்கு வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாகத் தாக்கிய போலீஸ்காரர், அவரது தந்தையான காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீஸார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சிவா என்
�
பவரது மகள் தங்கப்பிரியா 32 பி.எஸ்சி. பி.எட். பட்டதாரியான இவருக்கும், மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி அருகேயுள்ள காதக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமரன் மகன் பூபாலனுக்கும் 2018-ல் திருமணம் நடந்தது. அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பூபாலன் தலைமைக் காவலராக உள்ளார்.தங்கப்பிரியா தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் இரு மகன்கள் உள்ளனர். குழந்தைகளின் காதணி விழாவுக்கு ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், இருவருக்கும் தலா 5 பவுன்
�
நகைகள் போடுமாறு மாமனார், மாமியாரிடம், பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறின்போது, பூபாலன் மனைவியை கொடூரமாகத் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த தங்கப்பிரியா, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்
�
ளார். தங்கப்பிரியாவை கொடூரமாகத் தாக்கியது குறித்து பூபாலனும், அவரது தங்கையும் செல்போனில் கேலி, கிண்டலாக சிரித்துப் பேசியுள்ளனர். இருவருக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலானது இதற்கிடையே, தங்கப்பிரியாவின் பெற்றோர் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வரதட்சணை கேட்டு மகளைத் துன்புறுத்திய பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.இதையடுத்து, தலைமைக் காவலர் பூபாலன், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளராகப்
�
பணியாற்றும் அவரது தந்தை செந்தில்குமரன், தாய் விஜயா, தங்கை அனிதா ஆகியோர் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையில், தலைமைக் காவலர் பூபாலனை சஸ்பெண்ட் செய்து மதுரை மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.
