இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm 19-07-2025 சனிக்கிழமை 💐மேஷம் மேஷம்: எளிதாக முடிய வேண்டிய

download-24.jpeg

இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm
19-07-2025 சனிக்கிழமை

💐மேஷம்

மேஷம்: எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களை கூடப் போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்னை வந்து செல்லும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

💐ரிஷபம்

ரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும் . விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். மரியாதை கூடும் நாள்.

💐மிதுனம்

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியால் வெற்றி பெறும் நாள்.

💐கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் இனிதே முடியும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

💐சிம்மம்

சிம்மம்: சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

💐கன்னி

கன்னி: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.சந்திராஷ்டமம் நீடிபாபதால் கவனம் தேவை.

💐துலாம்

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடுமனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

💐விருச்சிகம்

விருச்சிகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

💐தனுசு

தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள்.பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

💐மகரம்

மகரம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். அரசு காரியங்கள் வெற்றியடையும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.

💐கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரி மதிப்பார். நன்மைகள் நடக்கும் நாள்.

💐மீனம்

மீனம்: சோர்வு களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். பொறுமை தேவைப்படும் நாள்.

The current image has no alternative text. The file name is: download-24.jpeg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *