ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானை துவம்சம் செய்தது இந்தியா

NEWS_20250511_100523_0000-1140x570-1.jpg

நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலமாக நம் நாடு பாகிஸ்தானை துவம்சம் செய்தது. இதில் அலறிய பாகிஸ்தான் நம்மிடம் மண்டியிட்டது. இந்நிலையில் தான் இந்த போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும், போர் எதை நோக்கி சென்றது?

என்பது பற்றியும் பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை எடுத்தது. கடந்த மே 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் ஏவுகணைகள் மூலம் நம் நாடு பாகிஸ்தானை குறிவைத்து தாக்கியது. இதில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத

முகாம்கள் அழிக்கப்பட்டன.அதேபோல் ராணுவ தளம், விமான தளங்கள் என்று முக்கிய 12 இடங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை வழங்கின. நம் நாடு அடித்த அடியில் நடுங்கிப்போன பாகிஸ்தான் மொத்தமாக சரணடைந்தது. போரை நிறுத்தும்படி நம்மிடம் கெஞ்சியது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. ஆனால் அமெரிக்க

அதிபர் டொனால்ட் டிரம்ப்போ, இந்தியா – பாகிஸ்தான் போரை அமெரிக்கா தான் நிறுத்தியது. நாங்கள் தலையீடு செய்யாவிட்டால் அணுஆயுத போராக மாறியிருக்கும் என்று மார்தட்டி வருகிறார். போர் தொடர்பாக பேசும்போதெல்லாம் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று தம்பட்டம் அடித்து கொள்கிறார். ஆனால் நம் நாடு பலமுறை கூறிவிட்டது. பாகிஸ்தான் கேட்டு கொண்டதால் தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதில் அமெரிக்காவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்று

பலமுறை கூறிவிட்டது.ஆனாலும் டிரம்ப் இன்னும் திருந்தவில்லை. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் தனது கட்சி எம்பிக்களுக்கு நேற்று இரவு டின்னர் விருந்து வழங்கினார். இந்த விருந்தில் அவரது கட்சி எம்பிக்கள், முக்கிய தலைவர்கள், ஆலோசகர்கள் பங்கேற்றனர். அதன்பிறகு அவர்கள் மத்தியில் டிரம்ப் பேசினார். அப்போது, ‛‛நாம் நிறைய போரை நிறுத்தி விட்டோம். அதில் மிகவும் தீவிரமாக நடந்த

இந்தியா-பாகிஸ்தான் போர் முக்கியமானது.போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 4, 5 விமானங்கள் சுடப்பட்டதாக நினைக்கிறேன். 5 விமானங்கள் சுடப்பட்டதாக நான் நினைக்கிறேன். இது புதிய வடிவிலான போர் போல் தெரிந்தது. இந்தியா பாகிஸ்தான் இரண்டுமே பெரிய அணு ஆயுத நாடுகள். மாற்றிமாற்றி தீவிரமாக தாக்குகிறார்கள். சண்டை பெரிதாகி கொண்டே சென்றது. அப்போது நாம் சொன்னது ஒன்று தான். ‛நீங்கள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய போகிறீர்களா. இல்லை, இப்படியே

சண்டை போட்டுக்கொண்டு, அணு ஆயுதங்களை தூக்கி வீசப்போகிறீர்களா என்று கேட்டோம். இப்படி தான் அந்த போரை நிறுத்தினோம்” என பேசியுள்ளார். இதன்மூலம் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மார்தட்டி உள்ளார். போரை அமெரிக்கா தான் நிறுத்தியது என்ற கூற்றை ஏற்கனவே நம் நாடு மறுத்துவிட்டது. ஆனாலும் டிரம்ப் ஏற்காமல் மீண்டும் மீண்டும் பொய் சொல்லி வருகிறார். அதுமட்டுமின்றி இந்தியா-பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு

வீழ்த்தப்பட்டதாக சொன்னது இதுவே முதல் முறை.ஆனால் 5 போர் விமானங்களும் எந்த நாட்டின் ராணுவத்துக்கு சொந்தமானது என்பதை அவர் சொல்லவில்லை.முன்னதாக போர் முடிவுக்கு வந்த பிறகு இந்தியாவின் ரபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் மார்தட்டியது. 3 ரபேல் உட்பட இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அந்த நாட்டு மக்களிடம் கூறியது. ஆனால் அதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் வெளியிடவில்லை. மாறாக

நம் நாடு பாகிஸ்தானின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியிருந்தது. அதனை பாகிஸ்தானே ஒப்புக்கொண்டது. ஒரே ஒரு போர் விமானத்தை மட்டுமே இழந்ததாக தெரிவித்து இருந்தது. ஆனால் உண்மையில் பாகிஸ்தான் நம்மிடம் மேலும் சில போர் விமானங்களை இழந்ததாக கூறப்படுகிறது.

The current image has no alternative text. The file name is: NEWS_20250511_100523_0000-1140x570-1.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *