ஜன்னல்களை உடைத்து இளைஞர்கள் வெளியேறிதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இஸ்ரேலில் விவசாயதொழிலுக்கு சென்ற இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்தார்.இஸ்ரேலில் உள்ள கிரியாத் மலாக்கி அருகே நேற்று காலை
�
இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் தொழிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது .தீப்பிடித்த போது பஸ்ஸில் 20 பேர் இருந்ததாகவும் பஸ்ஸின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் ஜன்னல்களை உடைத்து இளைஞர்கள் வெளியேறிதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா
�
கூறினார்.இளைஞர்கள் தொழிபுரியும் நிறுவனம் ,அவர்களின் செயல்பாடுகள் தொடர்பில் விசாரித்து வருவதாகவும், தற்போது இளைஞர்கள் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தீ விபத்தில் பஸ் முற்றிலுமாக எரிந்து சேதமாகியுள்ளது.
