ரஷ்யா தற்போது உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. 3 ஆண்டுகளை கடந்தும் போர் முடியவில்லை ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் உள்பட பிற வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு 100 சதவீதம் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். சீன அதிபராக இருந்தாலும் சரி, இந்திய பிரதமராக இருந்தாலும் சரி, பிரேசில் அதிபராக இருந்தாலும் சரி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், கியாஸ் வாங்கினால் 100
�
சதவீதம் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று மிரட்டி உள்ளார். இதற்கு நம் நாடு தரமான பதிலடி கொடுத்துள்ளது.நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா உள்ளது. ரஷ்யா தற்போது உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. 3 ஆண்டுகளை கடந்தும் போர் முடியவில்லை. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இருநாடுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி
�
வருகிறார்.ஆனால் ரஷ்யா – உக்ரைன் ஆகியவை போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உடன்படவில்லை. இதனால் போர் தொடர்ந்து வருகிறது. போரின் நோக்கம் நிறைவேறும் வரை சண்டையை நிறுத்த மாட்டோம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் டிரம்ப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் மீது கோபமடைந்துள்ளார்.
�
மேலும் உக்ரைன் ஆதரவு நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துள்ளார் டிரம்ப். ரஷ்யாவின் போரை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி லாங்க் ரேஞ்ச் ஏவுகணைகளை தருகிறோம். அதனை வைத்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை தாக்க முடியுமா என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம், டிரம்ப் கேட்டுள்ளார். இதன்மூலம் ரஷ்யாவுக்கு குடைச்சல் கொடுக்க
�
தயாராகி வருகிறார் டிரம்ப்.இது ஒருபுறம் இருக்க ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வேலையிலும் அமெரிக்கா உள்பட நேட்டோ நாடுகள் தொடங்கி உள்ளன. நேட்டோவில் உக்ரைன் சேர முயன்றது தான் ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு காரணம். இதனால் முதலில் இருந்தே அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட நேட்டோவில் உள்ள நாடுகள் உக்ரைன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளன. அதோடு உக்ரைனுக்கு அவ்வப்போது நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றன.இப்படியான
�
சூழலில் தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதிக்க உள்ளதாக டிரம்ப் கூறினார். நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை சலுகை விலையில் வாங்குகிறது. நம் நாடு வழங்கும் பணம் ரஷ்யாவின் உக்ரைன் மீதான போருக்கு பயன்படுத்தப்படுவதாக நேட்டோ நாடுகள் தெரிவித்துள்ளன. இதனால் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
�
ஆனால் நம் நாடு அதனை ஏற்கவில்லை. நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அளித்த பேட்டியில், ‛‛நீங்கள் சீன அதிபராகவோ, இந்திய பிரதமராகவோ, பிரேசில் அதிபராகவோ இருந்தால்; ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் வைத்துக்கொண்டு அவர்களிடம் எண்ணெய், கியாஸ் வாங்கினால் இதை குறித்துக்கொள்ளுங்கள்.
�
ரஷ்ய அதிபர் சமாதான பேச்சு வார்த்தையை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்றால், 100 சதவீதம் கூடுதலாக பொருளாதார தடை விதிக்கப்படும். இந்த மூன்று நாடுகளுக்கும் நான் சொல்லும் முக்கிய செய்தி என்னவென்றால், இந்த விவகாரத்தில் உங்களுக்கு கூடுதல் கவனம் தேவை. ஏனென்றால் இது உங்களை கடுமையாக பாதிக்கும்.இதனால் புதினுக்கு போன் போட்டு
�
அமைதி பேச்சுவார்த்தைக்கு வர சொல்லுங்கள். போரை நிறுத்த முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் இந்தியா, சீனா, பிரேசிலுக்கு மிகப்பெரிய அடி விழும்” என்று கூறியுள்ளார். அதாவது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் 100 சதவீதம் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று மிரட்டி உள்ளார்.
�
இந்நிலையில் தான் நேட்டோ தலைவர் மார்க் ரூட்டேவின் மிரட்டலை புறம்தள்ளி உள்ளது நம் நாடு. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் 100 சதவீதம் பொருளாதார தடை விதிக்கப்படுவதாக நேட்டோ பொதுச்செயலாளர் மிரட்டியுள்ளது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரந்தீர் ஜெய்ஸ்வால், ‛‛இதுதொடர்பான விவரங்களை நாங்கள் செய்திகள் மூலமாக பார்தோம். இந்த விஷயத்தில் அடுத்தக்கட்ட நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து
�
வருகிறோம்.நம்மை பொறுத்தவரை மக்களுக்கான எரிசக்தி தேவைகளை பாதுகாப்பது தான் முக்கியம். இதற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும். இந்த விஷயத்தில் சந்தை நிலவரம் மற்றும் உலகளாவிய சூழல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாம் செயல்படுகிறோம். இந்த விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டை யாரும் எடுக்க வேண்டாம்” என்றார். இதன்மூலம் நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதை தான் கவனத்தில் கொள்வோம், நேட்டோ பொதுச்செயலாளர் கூறியதை
�
புறம்தள்ளுவோம் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். அதோடு ரஷ்யா தொடர்பான விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் இரட்டை நிலைப்பாடு எடுக்க வேண்டாம் என்பதையும் வார்னிங்காக பதிவு செய்துள்ளார்.
