பெண்கள், ஆண்களின் தவிர்க்க முடியாத பழமாக செவ்வாழை திகழ்கிறது.. சிறுநீரகத்தில் கற்கள் சேராமல் தடுக்கும் சக்தி செவ்வாழைகளுக்கு உண்டு.. கர்ப்பப்பையை வலுப்படுத்தும் சக்தியும் செவ்வாழைக்கு உண்டு, 50 சதவிகிதம் நார்ச்சத்து நிறைந்திருப்பதே செவ்வாழையின் ஆகச்சிறந்த பிளஸ் பாயிண்ட்டாகும்..
�
இந்த செவ்வாழையை தினந்தோறும் சாப்பிடலாமா? சர்க்கரை நோயாளி சாப்பிடலாமா? சருமத்துக்கு எப்படி இதை உபயோகிப்பது? கல்லீரல் வீக்கத்துக்கு செவ்வாழை உதவுகிறதா? என்பதை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே காணலாம்.வைட்டமின் C, இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் கொண்டது செவ்வாழை.. குறிப்பாக இதிலுள்ள ஆக்சிடென்டுகள்,
�
வைட்டமின் B6 கர்ப்பப்பையில் கருவுறுதலின் விகிதத்தை பெருக்க செய்கிறது, கருமுட்டைகளை சேதாரமின்றி பாதுகாக்க செய்கிறது.கல்லீரல் ஆரோக்கியம் கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் சோர்வு, மன அழுத்தம் போன்ற தொந்தரவுகளை செவ்வாழைப்பழம் நீக்குகிறது.. எனவேதான், குழந்தைபேறு இல்லாத தம்பதிகளை தினமும் செவ்வாழை சாப்பிட சொல்கிறார்கள். தினமும் இரு
�
செவ்வாழைப்பழத்தை 48 நாள் சாப்பிடும்போது, ஆண்களின் பலவீனமான நரம்பு வலுப்பெறும்.. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர, செவ்வாழைப்பழங்கள் பேருதவி புரிகின்றன.. இதனால் தினந்தோறும் ஒரு பழத்தை சாப்பிட்டு வரும்போது, கல்லீரலிலுள்ள கிருமிகள், நச்சுக்கள், தொற்றுகள் விலகும்.. கல்லீரல் வீக்கமும் விலகிவிடும்.. நல்ல பாக்டீரியாக்கள் இதனால் குடலின் ஆரோக்கியமும் காக்கப்பட்டு, நல்ல
�
பாக்டீரியாவின் எண்ணிக்கையும் பத்து மடங்காக பெருகும் என்கிறார்கள் மருத்துவர்கள். அடிக்கடி செவ்வாழையை சாப்பிடுவோருக்கு கிட்னியில் கற்கள் சேருவதில்லை.. இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மக்னீசியம் ரத்த அழுத்த தொந்தரவை குறைக்கிறது..அதாவது ரத்த அழுத்தம் பாதிப்புடையவர்களுக்கு இப்பழத்தை சாப்பிட தந்து ஆய்வு மேற்கொண்டபோது, ரத்த அழுத்தம் 7 mm Hg அளவிற்கு குறைந்துவிட்டதாம்.. சர்க்கரை நோயாளிகள் செவ்வாழையை ஓரளவு
�
சாப்பிடலாம்.. மலச்சிக்கல், மூலநோய் பாதிப்புகளுக்கு சிறந்த மருந்து இந்த பழமேயாகும்.. சரும பாதுகாப்பு செவ்வாழையை சாப்பிட்டு வரும்போது, தோலில் சொறி, சிரங்கு, வேர்க்குரு, போன்ற தொந்தரவுகளை வருவதில்லை.. சருமத்தை பாதிக்காத வகையில், மிகசிறந்த கிருமிநாசினியாக செவ்வாழை உதவுகிறது. அதுமட்டுமல்ல, சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் இதன்மூலம் சீராகின்றன.. இப்பழத்தில் 75% நீர் மற்றும் ஆன்டி ஆக்ட்சிடெண்ட் உள்ளதால் சருமத்திற்கு
�
தேவையான நீர்ச்சத்தையும் தாராளமாக தருகிறது. சரும நோய் பாதிப்பு இருந்தால் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு செவ்வாழை சாப்பிடலாம்.தலைமுடி கண்கள் தலையில் பொடுகுத்தொல்லை இருந்தால் செவ்வாழைப்பழம் தாராளம்.. அதேபோல தேங்காய் எண்ணெய், அல்லது பாதாம் எண்ணெயோடு இப்பழத்தையும் கலந்து தலையில் தேய்க்கும்போது, தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும். 21 நாட்கள் பீட்டா
�
கரோட்டீன் நிறைந்த செவ்வாழையை தொடர்ந்து சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். மாலைக்கண் நோயால் அவதிப்படுபவர்கள், இரவு சாப்பிட்டதுமே, தொடர்ந்து 40 நாட்கள் இப்பழத்தை சாப்பிட்டால் தீர்வு உண்டாகும். அதேபோல, தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும் என்பார்கள். எப்போது சாப்பிடலாம் எப்போதுமே செவ்வாழையை பழுக்க வைத்து சாப்பிட வேண்டும்.. உணவு சாப்பிட்டதுமே இந்த செவ்வாழையை சாப்பிடக்கூடாதாம்.. காலை உணவுக்கு முன்பு, அல்லது பகல் 11 மணி, மாலை
�
நேரங்களில் சாப்பிடுவதால்,செரிமானம் சீராகி மலச்சிக்கல் தீர்கிறது. சாப்பிட்டதுமே செவ்வாழையை சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது.
