சிறுமியின் வாழ்வை சீரழித்த 4 சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் காதலனால் வந்த வினை

download-1-9.jpeg

உத்திரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட தவறான நபரின் பழக்கத்தின் காரணமாக சிறுமி ஒருவர் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரபிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர், அங்குள்ள பள்ளி ஒன்றியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு, இன்ஸ்டகிராம் மூலம் சிறுவன் ஒருவருடன் பழக்கம் கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்த பழக்கத்தின் காரணமாக இருவரும், கைப்பேசிகள் எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் ஜூலை 13 ஆம் திகதி (ஞாயிறு) காலை, சிறுமியின் பெற்றோர் சந்தைக்கு சென்றிருந்ததால், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்த சிறுவனிடம் தெரிவித்து, தன்னை சந்திக்க வருமாறு அழைத்திருக்கிறார். அதன்படி, சிறுவன், சிறுமியின் வீட்டின் கதவை தட்டியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் நன்பரை சந்திக்கபோகும் ஆவலில் உற்சாகமாக சிறுமி கதவை திறந்திருக்கிறார்.ஆனால், சிறுவனுடன், மேலும் மூன்று சிறுவர்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இவர்கள் எல்லாம் யார்? என்று கேட்பதற்குள், சிறுமியை வீட்டின் உள்ளே தள்ளிய 4 சிறுவர்களும், வலுகட்டாயமாக

மாரி மாரி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.இந்த நேரத்தில் மார்க்கெட்டிலிருந்து திரும்பிய மாணவியின் பெற்றோர், வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு, திருடன் நுழைந்துவிட்டானோ என்ற அச்சத்தில் உள்ளே ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அங்கு, தனது மகளுடன் நான்கு சிறுவர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்த அவர்கள், உடனடியாக மகளை வெளியே இழுத்து வந்து, சிறுவர்களை வீட்டிற்குள் பூட்டிவிட்டு, பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால், பொலிஸார் வருவதற்குள், குடியிருப்பு பகுதியில் இருந்த சிலர், இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் குடியிருப்பின் பெயர் கெட்டுவிடும் என்று கருதி, வீட்டின் கதவைத் திறந்து நான்கு சிறுவர்களையும் வெளியேற்றியுள்ளனர்.இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் பேரில், காவினகர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டிற்கு வந்த நான்கு சிறுவர்களில் மூவர், மாணவி பயிலும் அதே பள்ளியில் 9, 10, மற்றும் 11-ஆம் வகுப்புகளில் படித்து வருபவர்கள் என தெரியவந்துள்ளது.

குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை பொலிஸார், இரு சிறுவர்களை கைது செய்துள்ளனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் மீதமுள்ள இரு சிறுவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து பேசிய உதவி பொலிஸ் ஆணையர், வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டைனை பெற்று தரப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

The current image has no alternative text. The file name is: download-1-9.jpeg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *