இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm 12-06-2025.வியாழக்கிழமை 💐மேஷம் மேஷ ராசி

images-2-2.jpeg

இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm
12-06-2025.வியாழக்கிழமை

💐மேஷம்

மேஷ ராசி நண்பர்களே,உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் செயல்பாடுகள் சந்தோஷத்தை கொடுக்கும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். பெரியோர்களின் ஆசி கிட்டும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

💐ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். உறவினர்கள் இல்லம் நாடி வருவர். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவை.

💐மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். ஆரோக்ய விஷயத்தில் கவனம் தேவை. திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

💐கடகம்

கடக ராசி நண்பர்களே, தியானம் மன அமைதியை தரும். பயணங்கள் சற்று தள்ளிப்போகும். விலகி நின்றவர்கள் கூட வலிய வந்துப் பேசுவர். உத்யோகத்தில் மாற்றம் ஏற்படும்.

💐சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். அருகாமையில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஆதரவு பெருகும்.

💐கன்னி

கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் உயர்வு நிலை உண்டாகும். புத்தி சாதூர்யத்தால் தடைகளை தகர்த்தெறிய முடியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

💐துலாம்

துலாம் நண்பர்களே, சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தேக்க நிலையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். மனக்கவலைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

💐விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். அடிக்கடி மறதி தொல்லை ஏற்படும். திட்டமிட்ட காரியம் தாமதம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்

💐தனுசு

தனுசு ராசி நண்பர்களே, நல்லவர்களின் தொடர்பு நன்மையை தரும். பொருளாதார நிலையில் சில பின்னடைவுகள் வரும். எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

💐மகரம்

மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் சகஜநிலை திரும்பும். எதிர்பார்த்தது தாமதமின்றி நடக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

💐கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய வேலைகள் முடிவடையும். மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்

💐மீனம்

மீன ராசி நண்பர்களே, அடுத்தவர் மனம் வருந்தும்படி பேச வேண்டாம். புது விஷயங்களில் ஆர்வக் கூடும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்

The current image has no alternative text. The file name is: images-2-2.jpeg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *