russia Su-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் உக்ரைனின் அடுத்த அதிரடி சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷ்ய போர் விமானம் குர்ஸ்க் போர்க்களத்தின் முன்கள பகுதியில் இன்று 07சனிக்கிழமை ரஸ்யாவின் russia Su-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன்(ukrain) படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 1முதலாம் திகதி உக்ரைன் பாதுகாப்பு படையினர் பவுட்டினா சிலந்தி வலை என்ற குறியீட்டுப் பெயரில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.இதில் ரஷ்யாவின் ஐந்து விமான தளங்கள்மீது தாக்குதல் நடத்தி 41 விமானங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அந்த தாக்குதல் நடந்து 07 நாட்களுக்குள் மற்றுமொரு போர் விமானம் வீழ்த்தப்பட்டுள்ளது.
வெளியானது காணொளி
போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைக் காட்டும் காணொளியை உக்ரைன் விமானப்படை வெளியிட்டுள்ளது.இதனிடையே போர் விமானத்தின் இழப்பை ரஷ்யர்கள் ஒரு சிறப்பு டெலிகிராம் பதிவில் உறுதிப்படுத்தியதாகவும், விமானி உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
