23/05/2025. Pothikai.fm
இன்றைய ராசிபலன்கள்.
வெள்ளிக்கிழமை
💐மேஷம்
மேஷ ராசி நேயர்களே, உங்களால் மற்றவர்கள் பயனடைவர். எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். பிரியமானவர்கள் பாசமழைப் பொழிவர். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.வியாபார யுக்திகளை கையாளூவீர்கள்.
💐ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உருவாகும். கணவன் மனைவி உறவு பலப்படும் வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
💐மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, விலகிச் சென்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவியிடையே சில நெருடல்கள் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
💐கடகம்
கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். பல நாள் பிரச்னைகளுக்கு சுமுக முறையில் தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
நிலுவையில் உள்ள பணிகளை முடித்து காட்டுவீர்கள்.
💐சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு உணர முடியும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.ஏதோ ஒரு வழியில் நல்ல லாபத்தை அடைய முடியும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
💐கன்னி
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். எதிர்பார்க்காத செலவுகள் அதிகம் இருக்கும். பயணங்களால் உடல் அசதிகள் உண்டாகும்.
புதிய நபர்களை அதிகம் நம்பி ஏமாற வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
💐துலாம்
துலாம் ராசி நேயர்களே, யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் அடிக்கடி வரும். உடல் அசதி, மனச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.
தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும்.உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, புது நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பர். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும்.
மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
💐தனுசு
தனுசு ராசி நேயர்களே, இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையை தரும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். நண்பர்களால் சில நெருக்கடிகள் வரும். உத்யோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.
💐மகரம்
மகர ராசி நேயர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். எடுத்த சவாலில் வெற்றி கிடைக்கும். சற்றும் எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை
உண்டு.தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
💐கும்பம்
கும்ப ராசி நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும் லாபகரமாக அமையும்.
💐மீனம்
மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் பல நல்ல சம்பவங்கள் நடக்கும். உறவினர்களுடன் சின்ன மனவருத்தம் வரும். தெய்வ பிராத்தனைகள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.தொழில் யுக்திகளை கையாளூவீர்கள்
வருமானம் நன்றாக இருக்கும்.
