21/05/2025. Pothikai.fm
இன்றைய. ராசிபலன்கள்.
புதன்கிழமை
💐மேஷம்
மேஷ ராசி நேயர்களே,உவினர்களிடமிருந்து நல்ல செய்தி கிடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். புதியவர்கள் நட்பால் நன்மை உண்டு. முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
💐ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, கணவன் மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் மறையும்.மனதிற்கு இதமான செய்தி வரும். சொந்த பந்தங்கள் உதவியை நாடி வருவர். எதிர்பாராத செலவுகள் வரும். உத்யோகத்தில் பொறுமை அவசியம்
💐மிதுனம்
மிதுனராசி நண்பர்களே,
மனம் அமைதி பெறும்.மூன்றாம் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். பெற்றோர்கள் வழியில் நல்லது நடக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
💐கடகம்
கடக ராசி நண்பர்களே, நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.ஜாமீன் கையெழுத்துக்ள் தவிருங்கள். குடும்ப பாரம் அதிகரிக்கும். நினைத்த வேகத்தில் வேலைகளை செய்ய முடியும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
💐சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, பழைய நிலுவை பணி முடிப்பீர்கள்.உற்றார், உறவினர்களால் அனுகூல பலன் கிட்டும். வெளிநாட்டு யோகம் உண்டு. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
💐கன்னி
கன்னி ராசி நண்பர்களே, புதிய முயற்சிகள் சில நாள் தள்ளிப் முடியும். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்
💐துலாம்
துலாம் ராசி நண்பர்களே, காரிய தடைகள் விலகும்.ஆன்மீக ஈடுபாடு உண்டாகும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் இருக்கும். அலைச்சல் காரணமாக எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரக்கூடும் கவனம்.. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். எதிர்பார்ப்புகள் நாளடைவில் நிறைவேறும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
💐தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப பிரச்சினைகள் அகலும். பண தேவைகள் பூர்த்தியாகும்.சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். பிறரை விமர்சித்து சிக்கலில் மாட்ட வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
💐மகரம்
மகர ராசி நண்பர்களே, சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
💐கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும். எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
💐மீனம்
மீன ராசி நண்பர்களே, எதிர்பார்த்த வேலைகள் தாமதமாகும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். பெரியோர்கள் ஆலோசனை கைகொடுக்கும். புது தொழில் யோகம் அமையும்.
