இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm
(09-05-2025 வெள்ளிக்கிழமை)
💐மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களால் நன்மைகள் உண்டாகும்.பண வரவில் தாமதம் இருக்கும்.ஆடம்ப சிலவுகள் குறைப்பது நலம். புது நபர்களை நம்பி எதிலும் ஏமாற வேண்டாம். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
💐ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, உங்களால் மற்றவர்கள் பயனடைவர். மனதில் புது உற்சாகம் பிறக்கும்.துணிச்சலாக எதையும் செய்வீர்கள்.கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
💐மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப சுமைகள் அதிகமாகும். அடுத்தவர் தவறுகளை சுட்டி காட்ட வேண்டாம்.கணவன் மனைவிக்குள் தேவையற்ற சண்டைகள் உண்டாகும் . காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
💐கடகம்
கடக ராசி நண்பர்களே, எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றிநடை போட முடியும். பொருளாதார நிலை சீராக இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு.புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
💐சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கவும். பணத்தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் நடக்கும்.நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் வேலைப்பளு கூடும்.
💐கன்னி
கன்னி ராசி நண்பர்களே, பெற்றோர்களின் ஆலோசனை நம்பிக்கை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.வெளி நபர் யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
💐துலாம்
துலாம் ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும். பகைவர்கள் விலகி நிற்பர். ஒவ்வாத உணவு வகைகளை எடுத்துக்கொள் வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை.அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பண விவகாரங்களில் கவனம் தேவை.எதிர்ப்புகள் அடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
💐தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப வாழ்வு மேன்மையடையும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும். பிராத்தனைகள் நிறைவேறும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
💐மகரம்
மகர ராசி நண்பர்களே, எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். உடல் உபாதைகள் நீங்கும். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.உத்யோகத்தில் நன்மதிப்பை பெற முடியும்.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
💐கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தின் மேல் பற்று அதிகமாகும். பெரியோர்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். வீண் அலைச்சல் ஏற்படும். உணவு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
💐மீனம்
மீன ராசி நண்பர்களே,நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.மனதுக்கு இனிய செய்தி கிடைக்கும். மன வலிமை கூடும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
