மூதூர் பிரதேச சபையினை இலங்கை தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவின் அடிப்படையில்
மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட 13 வட்டாரங்களில்
5 வட்டாரங்கள் இலங்கை தமிழரசுக்கட்சியும்
3 வட்டாரங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும்
2 வட்டாரங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும்,
2 வட்டாரங்களை SJP கட்சியும்,
ஒரு வட்டாரத்தை NFGG கட்சியும் வெற்றி பெற்றுள்ளது .
1994 முதல் மூதூர் பிரதேச சபையினை கைப்பற்றி ஆட்சி செய்த முஸ்லீம் காங்கிரஸ் முதற்தடவையாக தோல்வியுற்றுள்ளது.
