இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை மெற்கொள்ள பாக் திட்டமிட்டிருக்கிறது. இது இப்போது இருக்கும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.ஆனால் ஏவுகணை சோதனையை செய்வதாக அறிவிப்பு வெளியாகிறதே தவிர இதுவரை அப்படி எந்த சோதனையும் மேற்கொள்ளவில்லை
�
என்பது தனிக்கதை.பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியா மேற்கொள்ளும் விசாரணைக்கு பாகிஸ்தான் உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியிருந்தன. ஆனால் பாகிஸ்தான் இதுவரை ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மாறாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை ஏவுகணையை பரிசோதிக்க தொடங்கியிருக்கிறது. இதற்கான வான்வெளி எச்சரிக்கையையும் கொடுத்திருக்கிறது. ஏப்.23ம் தேதி முதல் எச்சரிக்கை வந்தது.
�
இதையடுத்து ஏப்.26-27ம் தேதி அடுத்த எச்சரிக்கை வெளியாகியிருந்தது. கடைசியாக ஏப்.30-மே.2ம் தேதி அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் ஒரு முறைக்கூட ஏவுகணை சோதனை நடத்தப்படவில்லை. ஆக இது வெறும் பாவலாதான் என்று சிலர் கூறுகின்றனர். இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இப்படியான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது என்றும் கூறுகின்றனர். ஆனால் இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்த
�
திட்டமிடப்பட்டிருக்கும் இடம், இந்தியாவின் கடல் எல்லைக்கு அருகில்தான் இருக்கிறது. எனவே இது இப்போது இருக்கும் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சுற்றுலா பயணிகள். கடந்த 30 ஆண்டுகளில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது இருக்கிறது. எனவே இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
�
�
குறிப்பாக தீவிரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக பதிலடி இருக்கும் என பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த 9 நாட்களாக எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருக்கிறது. இந்தியா இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது. பிரச்சனையை பெருசாக்க வேண்டாம். இந்தியா கொடுக்கும் பதிலடி தீவிரவாதிகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டுமே தவிர, இரு நாடுகளுக்கும் போரை ஏற்படுத்தும் விதமாக இருக்க கூடாது என்று அமெரிக்கா அறிவுறுத்தியிருந்தது. இந்தியா பொறுப்புடன் செயல்படும் அதே நேரத்தில், பாகிஸ்தான் உரிய ஒத்துழைப்பு கொடுத்து பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
