இன்றைய_ராசிபலன்கள் Pothikai.fm 03-05-2025 சனிக்கிழமை துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது

astrology_10_1713269267525_1713278897895.jpg

இன்றைய_ராசிபலன்கள் Pothikai.fm 03-05-2025 சனிக்கிழமை துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது
💐மேஷம்
நண்பர்களே,நினைத்த காரியம் கைகூடும். எதிர்பார்த்த மன அமைதி கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரும்.

💐ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, சுப காரிய செலவுகள் அதிகமாகும். உறவினர்கள் இல்லம் நாடி வருவர். விரோதிகளும் நண்பர்களாக மாறுவர். உத்யோத்தில் பணிச்சுமை கூடும்.
தொழில் வியாபாரங்கள் லாபகரமாக இருக்கும்.

💐மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, குடும்ப வசதிகளை மேம்படுத்த முடியும்.கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தெய்வ வழிபாடு மனதிற்கு சந்தோஷம் தரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

💐கடகம்

கடக ராசி நண்பர்களே, முன் கோபத்தால் பிரச்சனைகள் வரக்கூடும்.அடுத்தவர் மனம் வருந்தும்படி பேச வேண்டாம். திட்டமிட்ட காரியம் கைகூடும். ஆரோக்ய விஷயத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் பொறுமையாக செயல்படவும்.

💐சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, பகைவர்கள் விலகி நிற்பர். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உடல் நலம் பலம் பெறும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் மிதமான வருமானத்தை தரும்.

💐கன்னி

கன்னி ராசி நண்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். உறவினர்களால் அனாவசிய செலவுகள் வரும். கடன் சுமைகள் குறையும். எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றிநடை போட முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

💐துலாம்

துலாம் ராசி நண்பர்களே, குடும்ப வாழ்வில் திருப்பதி உண்டாகும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படவும். எதிர்ப்புகள் அடங்கும்.பண விவகாரங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

💐விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, ஆன்மீகத்தில் நாட்டம் கூடும். நல்லவர்களின் தொடர்பு நன்மையை தரும். புது நபர்களிடம் அளவோடு பேசி பழகவும்.புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.மாலை 06:16 வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது.

💐தனுசு

தனுசு ராசி நண்பர்களே, வெளி நபர்களை அதிகம் நம்பாமல் இருப்பது நல்லது. பிடிவாத குணத்தை தளர்த்தவும்.ஒவ்வாத உணவு வகைகளை எடுத்துக்கொள் வேண்டாம். நெருக்கமானவர்கள் உதவி கேட்டு வருவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.மாலை 06:16 மணி முதல்
சந்திராஷ்டமம் தொடங்குகிறது.

💐மகரம்

மகர ராசி நண்பர்களே, யாரிடமும் விவாதம் பேச வேண்டாம். நிதானமான செயல்களால் நன்மைகள் பல உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் லாபகரமாக அமையும்.

💐கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, பெற்றோர்களின் ஆலோசனை நம்பிக்கை தரும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். மனக்குழப்பங்கள் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.

💐மீனம்

மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் நிலையான ஒரு சந்தோஷம் இருக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும் .
உறவினர்களிடமிருந்து நற் செய்தி ஒன்று கிடைக்கும்.உடல் சோர்வு, அசதி நீங்கும். திருமண முயற்சி கைகூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

The current image has no alternative text. The file name is: astrology_10_1713269267525_1713278897895.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *