அமெரிக்காவிடம் பதறி ஓடி உதவி கேட்ட பாகிஸ்தான்

495098240_1004252101852491_1505194946669555692_n.jpg

அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதர் ரிஸ்வான் சயீத் ஷேக், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் உதவி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்குமாறு வலியுறுத்தி உள்ளார். காஷ்மீர் என்பது சாதாரண பிரச்சனை இல்லை.. இது அணு ஆயுத பிளாஷ் பாயிண்ட்..

அதாவது அணு ஆயுத போராக வெடிக்க வாய்ப்புள்ள இடம்.இதை அமெரிக்காதான் சரி செய்ய வேண்டும். டொனால்ட் டிரம்ப் தலையிட வேண்டும். அணுசக்தி நெருக்கடியை உருவாக்கும் அபாயம் உள்ளது. இந்தியா சர்வதேச விதிகளை மதிக்க வேண்டும். ஐநா விதிகளை அணு ஆயுத பிளாஷ் பாயிண்ட்”.. இந்தியா பிளான்.. அமெரிக்காவிடம் பதறி ஓடி.. உதவி கேட்ட பாகிஸ்தான்

மதிக்க வேண்டும். காஷ்மீரில் அத்துமீற கூடாது. அப்படி மீறினால் அது எங்களுக்கே சிக்கலாக முடியும். உலக அமைதிக்கும் சிக்கலாகும்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதியின் பக்கம் நிற்க வேண்டும். அதற்கு அவர் அமைதியின் தூதுவராக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அமெரிக்கா மெசேஜ் இந்தியா பாகிஸ்தான் இடையே நிலைமை மோசமாகி உள்ள நிலையில் இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்கா முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது. பாகிஸ்தான் உள்துறை

அமைச்சர் மார்கோ ரூபியோ அளித்த பேட்டியில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர ஆலோசனைகள் மூலம் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும். நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இப்போது நிலைமை மோசமாகிவிட்டது. தற்போது நிலவுவது ஒரு பயங்கரமான சூழ்நிலை. இதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் குறித்து அமெரிக்கா இதுவரை

நிலைப்பாட்டை எடுக்கவில்லை.நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். நிலைமையை மோசமாகாமல் காக்க வேண்டும் என்று இரு அரசாங்கங்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இரண்டு நாடுகளும் அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகள். இரண்டு நாடுகளின் கைகளின் அணு ஆயுதம் இருப்பதை விட அவை அருகருகே இருக்கும் நாடுகள். அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்., என்று கூறி உள்ளார். இம்ரான் கான் எச்சரிக்கை: முன்னதாக பஹல்காம் துப்பாக்கி சூடு பற்றி பேசி உள்ள

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பஹல்காம் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். ஆனால் இதற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை. புல்வாமா நடந்த போதே நமக்கு எதிராக பொய்யாக புகார்கள் வைக்கப்பட்டன. அதில் நாம் ஒத்துழைப்பு தருவதாக கூறியும் இந்தியா அதை ஏற்கவில்லை. நமக்கு எதிரான புகார்களும் நிரூபிக்கப்படவில்லை. இந்த விவகாரம் ஒரு நியூக்ளியர் பிளாஷ்பாயின்ட். காஷ்மீர் ஒரு நியூக்ளியர் பிளாஷ்பாயின்ட்தான். பல கோடி பேர் இரண்டு நாடுகளிலும்

இருக்கிறார்கள். மோடி கவனமாக இருக்க வேண்டும். மோடி கவனமாக முடிவு எடுக்க வேண்டும்.அமைதியே எங்கள் நோக்கம், ஆனால் அதை கோழைத்தனம் என்று தவறாகக் கருதக்கூடாது. இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் அனைத்து திறன்களையும் பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்

தீர்மானங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, பாகிஸ்தான் அமைதியாக சென்று கொண்டு இருக்கிறது. அதை கோழைத்தனம் என்று இந்தியா நினைக்க கூடாது என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்தியாவை எதிர்த்தால் பாகிஸ்தான் ராணுவத்தின் அனுசரணை கிடைக்கும் என்ற நிலையில் இந்தியாவை எதிர்த்து இம்ரான் கான் இப்படி பேசி இருக்கிறார்

The current image has no alternative text. The file name is: 495098240_1004252101852491_1505194946669555692_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *